குடியேற்ற வாசிகள் சென்ற  படகு கவிழ்ந்து 35 பேர் பலி

Published By: Digital Desk 4

03 Jun, 2018 | 09:39 PM
image

ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 180 க்கும் மேற்பட்ட குடியேற்ற வாசிகள் சென்ற படகு துனிசியா கடற்பகுதியில் இன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.  காணாமல்போனோரை தேடும் பணி நடைபெற்று வருவதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். 

மத்திய தரைக்கடல் வழியாக அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

லிபியா நாட்டின் கடற்பகுதி வழியாக சென்றால் கண்காணிப்பு அதிகமாக உள்ளதால் துனிசியா கடற்பகுதி வழியாக இவர்கள் பெரும்பாலும் இத்தாலியை நோக்கிச் செல்கின்றனர்

அந்தவகையில் ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 180 மேற்பட்ட அகதிகள் சென்ற படகு துனிசியா  கடற்பகுதியில் இன்று கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில். 67 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் மூழ்கி காணாமல்போன பலரை தேடும் பணிகளில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுவருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10