(இரோஷா வேலு) 

கொஸ்லந்த பிரதேசத்தில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் ஊடகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் பொலிஸ் ஊடகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்வல பிரதேச நிலப்பரப்பில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த ஒருவரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்ததுடன் கஞ்சா தோட்டத்தையும் பொலிஸார் தீ வைத்து அழித்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 56 வயதுடைய உவகுடாஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.