இந்து சமுத்­திரம் மற்றும் ஆசியப் பிராந்­தி­யங்­க­ளுக்­கான தனது எதிர்­கால கப்பல் சரக்கு கையாள்­கைக்­கான கேந்­தி­ர­நி­லை­ய­மாக இலங்கை விளங்கும் என்று, சுவிஸ் நாட்டை தள­மாகக் கொண்­டி­யங்கும் சரக்கு மற்றும் தள­பாட போக்­கு­வ­ரத்துத் தீர்வு வழங்­கு­ந­ரான M&M Militzer &Münch குழுமம்  அறி­வித்­தது.

 

இலங்­கை­யா­னது மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த பகு­தியில் அமைந்­தி­ருக்­கின்­றது. கொழும்புத் துறை­மு­கத்தின் சரக்குக் கையாள்கை விரி­வ­டையச் செய்­யப்­பட்­ட­மை­யா­னது, கொழும்புத் துறை­மு­கத்தின் கொள்­கலன் கையா­ளுகைத் திற­ன் அதி­க­ரிக்­கப்­பட்­ட­மை­யா­னது, கப்­பற்­போக்­கு­வ­ரத்துத் துறையின் வளர்ச்­சியை பறை­சாற்­று­கின்­றது.  கப்பற் போக்­கு­வ­ரத்­தினைக் கருத்­திற்­கொள்­கையில் சிறந்­த­மு­றையில் இணைக்­கப்­பட்ட நாடு என்ற நிலையை இலங்கை தெற்­கா­சி­யாவில் பெற்­றுள்­ளது.  இந்­தி­யா­வையும் விஞ்சி, ஐக்­கிய நாடு­களின் வர்த்­தகம் மற்றும் அபி­வி­ருத்தி மாநாடு வெளி­யிட்ட ‘Liner Shipping Connectivity Index 2017’ எனும் சஞ்­சி­கையில் உலகில் 15 ஆவது இடத்தைப் பிடித்­தி­ருக்­கின்­றது. இலங்­கையை முற்­று­மு­ழு­தான கடற்­படை மற்றும் வர்த்­தக கப்­பற்­போக்­கு­வ­ரத்துக் கேந்­தி­ர­நி­லை­ய­மாக மாற்­று­வது என்ற அரசின் இலக்கை மீள நிலை­நி­றுத்தும் முக­மாக M&M ஆனது அத­னது சரக்குக் கையாள்கை நட­வ­டிக்­கை­களை இலங்­கையில் ஸ்திரப்­ப­டுத்­து­வ­தாக அறி­வித்­துள்­ளது.” என்று M&M M&M Militzer &Münch (Pvt) Ltdஇன் முகா­மைத்­துவப் பணிப்­பாளர், டிலும் ஸ்டெம்போ M&M Militzer & Münch இன் கொழும்பு அறி­முக நிகழ்வில் கூறினார். 

ஒட்­டு­மொத்­த­மாக, இலங்­கையின் போக்­கு­வ­ரத்து சேவையில் ஏற்­பட்ட முன்­னேற்­றங்கள், இலங்­கையின் சேவைத்­து­றையை 2017 ஆம் ஆண்டில் விரி­வ­டை­யச்­செய்­தி­ருந்­தது. அத்­துடன் அவ் வளர்ச்­சி­யா­னது 2018 ஆம் ஆண்­டையும் தாண்­டிச்­செல்லும் என்றும் கூறிய ஸ்டெம்போ இலங்கை அரசின் முயற்­சி­களைப் பாராட்­டினார். 

“இலங்கை அர­சா­னது பொது­வாக போக்­கு­வ­ரத்துத் துறை­யையும், குறிப்­பாக, கப்பற் போக்­கு­வ­ரத்துத் துறையை முன்­னேற்­று­வ­திலும், நிலை­பேண்­தகு முயற்­சிகள் பல­வற்றை எடுத்­துள்­ளது. இலங்கை துறை­முக அதி­கா­ர­சபை சட்டம் மற்றும் வணிக கப்பற் சட்டம் என்­ப­ன­வற்றை தற்­கால ஏற்­பாட்­டியல் மற்றும் கப்­பற்­போக்­கு­வ­ரத்துத் தேவை­க­ளுக்­கேற்ற விதத்தில் மறு­சீ­ர­மைப்­ப­தற்கு 2018 ஆம் ஆண்டின் வரவு - செல­வுத்­திட்ட உரையில் கொடுக்­க­பட்ட முன்­மொ­ழி­வு­களை கடற்­போக்­கு­வ­ரத்து சமூகம் வெகு­வாகப் பாராட்­டி­யுள்­ளது. இலங்­கையின் 2025 ஆம் ஆண்டின் எதிர்­காலத் தொலை­நோக்­குக்­க­மைய ஆரோக்­கி­ய­மான போட்­டித்­தன்­மை­யா­னது, அதி­க­ள­வி­லான பிர­தான சர்­வ­தேச கப்­பல்­போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­க­ளையும், ஏற்­பாட்­டியல் நிறு­வ­னங்­க­ளையும் அதன் செயற்­பா­டு­களை இலங்­கையில் விரி­வ­டையச் செய்­துள்­ளது.”

M&M இன் சகோ­தர நிறு­வ­ன­மா­னது, உலகின் எட்டு நேர வலை­யங்­களை இணைத்து, கிழக்கு சீனாவின் யியு­வி­லி­ருந்து ஸ்பெயினின் மட்ரிட் வரை 13000 கிலோ மீற்­றர்­வரை நீண்ட ரயில் பாதையைக் கொண்­டி­ருக்­கின்­றது.  1880 ஆம் ஆண்டில் ஜேர்­ம­னியில் ஆரம்­பிக்­கப்­பட்ட Militzer &Münchஆனது இன்று சுவிட்­சர்­லாந்தைத் தள­மாகக் கொண்ட TransInvest  குழு­மத்தின் ஓரங்­க­மா­கும. Militzer &Münch ஆனது 25 நாடு­களில் 100 இடங்­களில் செயற்­ப­டு­கின்­றது. வான், கடல், தரை மற்றும் ரயில் வழி­யான பய­ணங்கள் மற்றும் மேற்கு, கிழக்கு ஐரோப்­பிய, பொது­ந­ல­வாய சுதந்­திர நாடுகள். மத்­திய கிழக்கு, தூர கிழக்கு மற்றும் மெஹரப் போன்ற அடர்த்­தி­யான கிளை வலை­ய­மைப்­பு­க­ளி­னூ­டான திட்ட போக்­கு­வ­ரத்­துகள் என்­ப­ன­வற்றை வழங்­கு­கின்­றன. இலங்­கையில் கப்பல் போக்­கு­வ­ரத்துத் துறைக்­குள்ள சாத்­தி­யங்கள் குறித்து M&M தாய் நிறு­வனம் அதி­க­ள­வி­லான எதிர்­பார்ப்­பு­களைக் கொண்­டுள்­ள­தாக லோதர் தோமா தெரிவித்தார். 

எங்கள் கூட்டாண்மைப் பெறுமானங்கள் வலிமையான தூண்களைப் போன்றவை. எங்கள் அன்றாட வேலைகளுக்கு ஆதரவளிப்பவை. எங்கள் கூட்டாண்மை கொள்கையானது உயர் பொறுப்புமிக்கதெனும் அடிப்படையில்,  எங்கள் சக உயிர் வாழ்வோருக்காகவும், எங்கள் சுற்றாடலுக்காகவும், நாங்கள் கொண்டுசெல்லும் பொருட்களுக்காகவும் இதனைக் கடைப்பிடிக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.