ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளன என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க  இந்த கூட்டணியே 2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தெரிவு செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாகாணசபை தேர்தலில் கூட்டணியொன்றே போட்டியிடும் என தெரிவித்துள்ள எஸ்பி திசநாயக்க தற்போதைய தேசிய அரசாங்கம் அதன் எஞ்சிய காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலகியது சரியான முடிவு என ஜனாதிபதி நினைக்கின்றார் என நான் கருதுகின்றேன் என எஸ்பி திசநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தில் உள்ளமை தவறு என சிறிசேன கருதுகின்றார் என நான் கருதுகின்றேன் எனவும் எஸ்பி திசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம் ஒட்டுமொத்தத்தில் இது ஐக்கியதேசிய கட்சியை தோற்கடிப்பதற்கான தந்திரோபாயம் என முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.