இஸ்ரேல் படையினரால் துப்பாகி சூட்டில் காயமடைந்த ஒருவருக்கு வைத்திய உதவிக்காக சென்ற தன்னார்வலர் ஒருவர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இஸ்ரேல் மற்றும் பாலத்தீன நாடுகளின் எல்லையில் இடம்பெற்றுவரும் சண்டையில் இஸ்ரேல் படையினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவருக்கு வைத்திய உதவி வழங்கச் சென்ற, 21 வயதான பெண் தன்னார்வலர் ரஸன் அல்-நஜாரின் கடந்த வெள்ளிக்கிழமை, இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கலந்துகொண்டனர்.

சண்டை இடம்பெரும் பகுதியில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.