வடமராட்சி கிழக்கு  மருதங்கேணி பகுதியில் அத்துமீறி தங்கி மீன்பிடித்தொழிலில்  ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்கள் எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குள்  அரசாங்கம் வெளியேற்றவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருதங்கேணியில் தமிழ் மக்களிற்கு சொந்தமான நிலத்தில் நூற்றுக்கணக்கான  வாடிகளை அமைத்துக்கொண்டு பெருமளவு சிங்கள மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடமராட்சி கிழக்கு மீனவர்கள் அவர்களை வெளியேற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக தாங்கள் புலனாய்வுபிரிவினரின் கொலை மிரட்டலிற்கு உள்ளாகியுள்ளதாக  பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே சிங்கள மீனவர்களை வெளியேற்றுவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று  இன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கருத்து கொண்டு தெரிவித்துள்ள சுமந்திரன் தென்பகுதி மீனவர்களை உடனடியாக வெளியேற்றவேண்டும் என மத்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்படும் என தெரிவித்;துள்ளார்.

ஐந்தாம் திகதிக்குள் மத்திய அரசாங்கம் உரிய பதிலை வழங்கவில்லை என்றால்  ஆறாம் திகதி பாரிய போராட்டத்திற்கு மக்கள் தயாராகவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.