(எம்.சி.நஜிமுதீன்)

தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள சீரற்ற காலநிலையினால் நாட்டின் சில பாகங்களில் இன்றும் மழை பெய்யவுள்ளதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கிணங்க மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழைபெய்யலாம்.

மேலும் சப்ரகமுவ மாகாணத்தின் சில பிரதேசங்களில் நூறு மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகும் வகையில் கடும் மழை பெய்யலாம்.

இதேவேளை இடியுடன் கூடிய மழைபெய்யும் போது காற்று பலமாக வீசலாம். மேலும் தென் மாகாணம் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் மணிக்கு ஐம்பது  கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.