மணம் முடித்த பல தம்பதியருக்கு மழலை இல்லை என்ற கவலை வாட்டி வதைப்பதுண்டு இது பல தம்பதியருக்கு மன உளைச்சலையும் சமுதாயத்தில் கேலிக்குறி நிலையையும் ஏற்படுத்துவது இயற்கையே.

இவர்களுக்கு என்னதான் நிறைய செல்வம் இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லை என்று பலர் கூறுவதை நாம் காதால் கேட்டுள்ளோம். இந்த சமுதாய மக்களின் கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்குமுகமாக இப்பொழுது நிறைய புதிய மாற்றங்கள் நிறைந்துள்ளன.குழந்தை இல்லை என்று இனி எவரும் கவலை கொள்ளத் தேவையில்லை என்கிறார் ஸிருஸ்டி ஃபெர்ட்டிலைஸின் தலைமை மருத்துவரும் இந்தியாவில் புகழ் பெற்ற குழந்தை பேறு மருத்துவருமான டாக்டர் எஸ்.சாமுண்டி சங்கரி

அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:

கேள்வி - உங்கள் ஸ்ருஸ்டி குழந்தைகள் மருத்துவமனையின் மகத்துவத்தை பற்றி கூற முடியுமா?

பதில் - திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் அடையாளமே அவர்களது இல்லற வாழ்க்கையின் அடையாளச் சின்னம். சிலருக்கு பொருள் ஆஸ்தி இருந்தாலும் குழந்தை பாக்கியம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது இத்தகையவர்களை உலகம் ஏளனமாகவே பார்க்கின்றது. இந்த சமுதாயத்திற்கு ஒரு பெரும் சவலாகவே நாங்கள் இந்த ஸ்ருஸ்டி பெர்ட்டிலிட்டி என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றோம். பெண் என்றால் மலடி என்றும் ஆண் என்றால் மலட்டுத்தன்மையுடையவர்கள் என்றும் கூறும் குறைபாட்டை நீக்கவுமே நாங்கள் தீவிரமாக செயல்படுகின்றோம்.

கேள்வி - டெஸ்ட் டியுப் பேபி என்றால் என்ன? செயற்கை முறை கருத்தரிப்பு என்றால் என்ன?

பதில் - இவை இரண்டுக்கும் இடையில் பல வித்தியாசங்கள் உள்ளன. டெஸ்ட் டியூபில் குழந்தை என்பது கருப்பைக்கு வெளியில் வைத்து உருவாக்குவது. இச் செயல் முறை கருத்தரிப்பு வழியாகும். தனது கணவரின் விந்தை எடுத்து மனைவியின் கருமுட்டையுடன் சேர்த்து கருப்பையிலேயே உருவாக்கும் செயலாகும்.

கேள்வி :

சிலருக்கு குழந்தைகள் கிடைக்காததற்கு உண்மையான காரணம்தான் என்ன?

பதில் - இக் கேள்விக்கு இன்றைய உலக வாழ்க்கையில் மனிதர்களின் பகட்டு மேனியின் வாழ்க்கை நடைமுறை ஒரு காரணமாக கொள்ளலாம். உதாரணமாக மது, புகை பழக்கத்திற்கு தன்னை அடிமைப்படுத்திக் கொள்வது. உடல் பருமன் , சக்கரை நோய், உரிய காலத்தில் திருமணம் செய்யாமை, அப்படி செய்தாலும் சில காலம் சென்று குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது பெரும் தவறாக நேர்ந்து விடுகின்றது. அடுத்ததாக இன பெருக்க உறுப்புக்களின் கோளாறுகள், முறையில்லாத முறையில் கருக்கலைப்பு, கருமுட்டை போதியளவு இல்லாமை, கருமுட்டை ஆரோக்கியம் இல்லாத சூழ்நிலை, கருப்பையில் பிரச்சினை, குழாய்களின் அடைப்பு, குழாய் சுருங்கி இருப்பதன் விளைவு, ஆண்களின் விந்துக்களில் போதிய வீரியம் இல்லாமை போன்ற குறைபாடுகளை கண்டு பிடித்து சோதித்து அவர்களின் குறைபாடுகளை நீக்குவதே எங்கள் நோக்கம். அக்குறைகளை நீக்கினால் நிச்சயம் குழந்தை பேறு பெறலாம்.

கேள்வி - குழந்தை இல்லாததற்கு ஒட்டுமொத்தத்தில் யார் காரணம்? பெண்களா? ஆண்களா?

பதில் - இக்கேள்விக்கு பதில் கூற வேண்டுமாயின் இதற்கு இருவருமே காரணமாகின்றார்கள். ஆண்கள் 30 சதவீதமும் பெண்கள் 30 சதவீதமும் காரணம் என மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கேள்வி - எத்தனை வயது வரை குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம்?

பதில் - பெண்களுக்கு பிறந்தது முதல் கரு முட்டையின் வளர்ச்சி அதிகரித்தபடியே இருக்கும். ஆனால் முப்பது வயதாகும் போது அதன் வளர்ச்சி குறையத்தொடங்கும். இதனால் தான் வயது சென்று திருமணம் செய்யும் பல பெண்களுக்கு குழந்தைப் பேற்றை பெற முடியாது போகின்றது. இது கவலை அளிக்கும் செயல். ஆனால் ஆண்களுக்கு (50) ஐம்பது வயதாகும் போதும் கூட விந்து குறைவது கிடையாது. பல ஆண்கள் எழுபது (70) வயதிலும் தந்தையாகின்றனர். எதுவாக இருந்தாலும் திருமண மானவுடன் விரைவாக அருகில் இருக்கும் ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி இருவரும் பரிசோதித்துக் கொள்வது மிகவும் நன்மை அளிக்கும். இது நல்ல வழி முறையாகும். குழந்தை இல்லை என்று காலமெல்லாம் கடந்து விட்டது.

விஞ்ஞான வளர்ச்சியில் கவலைப்பட்டஇன்றைய மருத்துவ வளர்ச்சியில் அனைவரும் நல்ல முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். இருவரிடமும் என்ன குறைபாடுகள் உள்ளன என்று தெளிவாக ஆராய்ந்து அவர்களின் குறைகளை நீக்கி அவர்களுக்கு நவீன சிகிச்சையை எங்கள் மருத்துவமனையில் அளித்து வருகிறோம் . குழந்தைகள் இல்லாத தம்பதியினர் தமது குறைகளை நீக்கி சரியான முறையில் சிகிச்சை பெற்றார்கள் என்றால் குழந்தைச் செல்வத்தை பெற்றுக் கொள்ளலாம். தாங்கள் மலட்டுத் தன்மை இல்லாதவர்கள் என்பதை நிரூபிக்கலாம். இதற்காகவே எங்கள் ஸ்ருஸ்டி மகப்பேற்று மருத்துவமனையின் நோக்கமாகும். குறிப்பாக இலங்கையர்கள் பல பேர்கள் எங்களிடம் மருத்துவ சிகிச்சை பெற்று குழந்தை பேற்றை பெற்றுள்ளனர் . நான் விரைவில் கொழும்பில் நடக்கும் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளேன். அப்பொழுது என்னை நேரிலும் சந்திக்கலாம்.

எங்களது தொலைபேசி

இலங்கை - 077 2646800

இந்தியா 0091 9840669669