ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டி இலங்கை குழாம் ஜப்பான் பயணம்

Published By: Daya

02 Jun, 2018 | 04:19 PM
image

(எம்.எம். சில்வெஸ்டர்)

18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும்  இலங்கை குழாம் ஜப்பானை நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

ஜப்பானின் கிபு நகரில்  எதிர்வரும்  7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில், 35 நாடுகளிலிருந்து 437 வீர, வீராங்கனைகள் போட்டியிடுகின்றனர். இதில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 5  வீரர்களும், 7 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

அண்மையில் நடைபெற்று முடிந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்களை வென்று அசத்திய அருண தர்ஷன (200, 400 மீற்றர்), அமாஷா டி சில்வா (100, 200 மீற்றர்) மற்றும் தில்ஷி ஷியாமலி குமாரசிங்க (800 மீற்றர்) ஆகியோர், ஆசிய கனிஷ்ட போட்டியிலும் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பார்கள். அத்துடன், இவர்கள் மூவரும் இலங்கைகக்கு பதக்கங்களை வென்றுக்கொடுக்கக் கூடியவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இம்முறை போட்டித் தொடருக்காக இலங்கை அணியில் நான்கு தர 400 அஞ்சலோட்டத்திற்காக ஆண்கள், பெண்கள் என இரண்டு அணிகளும் பங்கேற்கின்றமை சிறப்பம்சமாகும். 

எனினும், 4 தர  100 மீற்றர் ஓட்டப் போட்டிக்கு ஆண்கள் பெண்கள் என இரண்டு பாலாரும் பங்குகொள்ளவில்லை.  இருந்தபோதும், பெண்களுக்கான 4 தர 100 மீற்றர் போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு கிடைக்கூடிய வாய்ப்பு அற்றுப்போனது. 

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் வரலாற்றில் 17 அத்தியாயங்களில் பங்கேற்றிருந்த இலங்கை அணி, 4 தங்கப் பதக்கங்கள், 10 வெள்ளிப் பதக்கங்கள் , 6 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 20 பதக்கங்களை வென்றுள்ளது.

இதேவேளை, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும்  இலங்கை அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்ட அனில் வீரசிங்கவை விளையாட்டுத்துறை அமைச்சு பதவிநீக்கம் செய்துள்ளதுடன், புதிய முகாமையாளராக சுசன்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவர் பயிற்சியாளராகவும் செயற்படுவார்.

இலங்கை குழாம் விபரம்

ஆண்கள்

அருண தர்ஷண (200மீ,400மீ,4x400மீ)

பசிந்து கொடிகார (400மீ,4x400மீ)

பபசர நிக்கு (400மீ,4x400மீ)

ரவிஷ்க இந்திரஜித் (4x400மீ)

தரிந்து தசுன் (உயரம் பாய்தல்)

பெண்கள்

அமாஷா டி சில்வா (100மீ,200மீ,4x400மீ)

தில்ஷி ஷியாமலி குமாரசிங்க (400மீ,800மீ,4x400மீ)

சச்சினி திவ்யான்ஜலி (4x400மீ)

ரொமேஷி அத்திடிய (4x400)

சந்துமினி பண்டார (4x400மீ)

ரித்மா நிஷாதி (நீளம் பாய்தல்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31