கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களுக்கு இடையிலான அணிக்கு 7 பேர்  கொண்ட‘விவேகன்ஸ் புட்போல் லீக்’ போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கொழும்பு  பொரளை கெம்பல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

எட்டு கால்பந்தாட்ட அணிகள் பங்குகொள்ளும் இப்போட்டித் தொடரில், இரண்டு குழுக்களின் கீழ் லீக் சுற்றுபோட்டிகள் நடைபெறவுள்ளன. ஏ குழுவில் விவேகன்ஸ் பார்ஸ், நார்விக் விவேகன்ஸ் எப்சி , ரியல் பெட்டிஸ் விவேகன்ஸ், விவேகன்ஸ் புளு பெரிஸ் ஆகிய அணிகளும் பீ குழுவில் விவேகன்ஸ் சிட்ட, விவேகன்ஸ் பெரிஸ் எப்சி, விவேகன்ஸ் சுப்பர் கிங்ஸ், நியூ செட்டி விவேகன்ஸ் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. 

போட்டிகளின் பெறுபேறுகளையடுத்து இரண்டு குழுவிலிருந்து முதலிரண்டு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும். வெற்றி பெறும் அணிக்கு விவேகன்ஸ சம்பியன் கிண்ணம் பரிசளிக்கப்படும்.