இலங்கைக்கு நேர்மையான விதத்தில் உதவிகளை வழங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முட்டுக்கட்டை நிலையை அடைந்துள்ளமை குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் சீனாவின் வெளிவிவகார  அமைச்சின் பேச்சாளர் குவா சன்யிங்  இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையும் சீனாவும் மூலோபாய ஒத்துழைப்பு சகாக்கள் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் நேர்மையான உதவிகளை வழங்கியுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தனது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கும் தனது சுய அபிவிருத்தி திறனை அதிகரிப்பதற்கும் சீனா தன்னால் முடிந்தளவு உதவிகளை வழங்குகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை இலங்கை அரசாங்கமும் மக்களும் பாராட்டியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடான நட்புறவு ஒத்துழைப்பு உறவுகளிற்கு  சீனா முக்கியத்துவம் அளிக்கின்றது இலங்கையுடன் தொடர்ந்தும் ஒத்துழைக்க விரும்புகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.