தாஜுடீனின் மரண விசாரணைகளை நல்லாட்சி பிச்சைக்காரனின் புண்ணைப் போலாக்கியுள்ளது!!!

Published By: Digital Desk 7

02 Jun, 2018 | 02:51 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

மாதுளுவாபே சோபித தேரரின் ஞாபகார்த்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து குறித்து கூட்டு எதிர்க்கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியின் கூற்று தொடர்பில் ஆராய்வதற்கு கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் கடந்த வியாழக்கிழமை முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. அதன்போது அக்கூற்று குறித்து உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதற்கு கூட்டு எதிர்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அளகப் பெரும தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

எனவே அக்குழு அது சம்பந்தமாக ஆராய்ந்து குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,

அரசியலமைப்பின் ஜனாதிபதி நியமனத்தின் பிரகாரம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்யும் வரையில் பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் செல்லுபடியாகும். எனவே முன்னாள் ஜனாதிபதி கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் பயணம் மேற்கொண்டமை ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தியாகும்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி காரியாலயத்திற்குரிய அதிகளவான பாதுகாப்பு வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்குரிய உத்தியோகபூர்வ வாகனங்களை மாத்திரமே பெற்றுள்ளார்.

மேலும் குண்டு பரிசீலனை செய்யும் இயந்திரத்தை கொண்டு சென்றிருப்பதாக குறிப்பிட்டிருப்பது உண்மைக்குப் புறம்பானதாகவும். ஏனெனில் அவ்வாறான குண்டு பரிசீலனை செய்யும் இயந்திரம் ஜனாதிபதி காரியாலயத்தில் இல்லை. அத்துடன் நல்லாட்சியின் மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் வசீம் தாஜுடீனின் மரண விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவரவில்லை. அதனை முடிவுக்கு கொண்டு வந்தால் முன்னாள் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்க முடியாது போகும் என்ற அச்சத்தில் அவ்விசாரணையை பிச்சைக்காரனின் புண்ணைப்போலாக்கியுள்ளதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு - புறக்கோட்டையில் அனுமதியற்ற கடைகளை...

2024-04-20 11:30:37
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09