ஸ்கொட்லாந்தை சேர்ந்த காதல் ஜோடி  150 அடி உயரம் கொண்ட கிரேன் மீது ஏறி நின்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேரி என்ற இளைஞரும், கேட் என்ற பெண்ணும் பல நாட்களாக  காதலித்து வந்த நிலையில், எல்லோரையும் போல சாதாரணமாக திருமணம் செய்யக்கூடாது என முடிவெடுத்த அவர்கள் வித்தியாசமான முறையை கையாண்டனர்.

அதன்படி 150 அடி உயரம் கொண்ட கிரேன் மீது ஏறி நின்று திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் நண்பர்கள் புடைச்சூழ திருமணம் செய்து கொண்டனர். 

தம்பதிகள் திருமணம் செய்ய உதவியாக இருந்த கிரேன் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் ஸ்கொட்லாந்தின் மிகவும் தனித்துவமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் இடத்தில் கிரேன் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.