வவுனியாவில் லீசிங் நிறுவன ஊழியர்கள் தாக்கியதில் ஒருவர் படுகாயம்

Published By: Daya

02 Jun, 2018 | 02:39 PM
image

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி  நுழைந்த லீசிங் நிறுவன ஊழியர்கள் வீட்டு உரிமையாளருடன்  தர்க்கத்தில் ஈடுப்பட்டதுடன் அவரை தாக்கியுள்ளனர். 

 இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2015ஆம் ஆண்டு லீசிங் நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு மாதாந்த கட்டுப்பணம் கடந்த மூன்று மாதங்களாக  செலுத்தப்படவில்லை. இதையடுத்து குறித்த மோட்டார் சைக்கிளை கையகப்படுத்தவதற்கு அவ்வீட்டிற்கு லீசிங் நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் சென்றுள்ளனர்.

இதையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளர் பணம் கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டதற்கான காரணங்களைத் தெரிவித்து கிளை முகாமையாளருக்கு அறிவித்துள்ளேன் சில தினங்களில் பணத்தை ஏற்பாடு செய்து கட்டிவிடுவதாகவும் மோட்டார் சைக்கில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது இதன் இழப்பீட்டுப்பணம் வரவில்லை அது வந்ததும் அனைத்துப்பணங்களையும் திரட்டிக்கட்டிவிடுவதாகத் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து வாகனத்தை கையகப்படுத்த வந்த இரு ஊழியர்கள் தகாத வார்த்தைப் பிரயோகத்தில்  ஈடுப்பட்டதை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் உரிமையாளரை தாக்கியுள்ளனர்.

 எனினும் பொலிஸார் தாக்கிய லீசிங் நிறுவன ஊழியர்ளைக் கைது செய்யவில்லை.

இவ்வாறு வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த லீசிங் நிறுவன ஊழியர்கள் மீது பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை வீடுகளுக்குள் சென்று அடாவடியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் வவுனியாவிலுள்ள லீசிங் நிறுவனத்தின் முகாமையாளரிடம் பக்கச்சார்பின்றி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என மோட்டார் சைக்கிள் உரிமையாளர் கோரியுள்ளார். 

இதேவேளை இன்று காலை 10 மணியளவில் தொலைபேசியில் 0772577218 என்னும் இலக்கத்திலிருந்து அழைப்பு மேற்கொண்ட நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறும் தவறினால் உங்களை 4ஆம் மாடிக்கு கொண்டு சென்று விசாரிப்போம்என அச்சுறுத்தியுள்ளார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04