"காலா மட்டுமல்லாமல், ரஜினியின் எந்த படத்தையும் கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்" என கன்னட ரக்‌ஷன வேதிகே அறிவித்து உள்ளது.

காவிரி பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக பேசியதற்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ரஜினி கதாநாயகனாக நடித்துள்ள ‘காலா‘ படம் எதிர் வரும் 7ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்த ‘காலா‘ படத்தை கர்நாடகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று பல்வேறு கன்னட அமைப்பினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

கன்னட திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அந்த சபையின் நிர்வாகிகள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா‘ படம் கர்நாடகத்தில் திரையிடப்படாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கன்னட ரக்‌ஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி, 

"மன்னிப்பே கேட்டாலும், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்.  காலா மட்டுமல்லாமல் ரஜினியின் எந்த படத்தையும் இனி வெளியிட அனுமதிக்க மாட்டோம்." என கூறியுள்ளார்.