"பெயர்களை ஜனாதிபதி வெளியிடாவிடின் அது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம்"

Published By: Digital Desk 7

02 Jun, 2018 | 01:03 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

"மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன்   தொடர்புப்பட்ட நிறுவனத்திடமோ அல்லது நபர்களிடமோ பணம்பெற்றதாக கூறப்படுகின்ற 118 பேரின் பெயர்களை ஜனாதிபதி வெளியிடா விட்டால் அது நாட்டு மக்களுக்கும், எஞ்சிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் செய்யும் துரோகம் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான வகையில் பணம் பெற்றுள்ளதாக கூறப்படும் 118 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடுமாறு சபாநாயகர் ஜனாதிபதி செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தெளிவுப்படுத்தும் போதே சமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் கூறுகையில் , 

"இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன்  குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியசுக்கு சொந்தமான நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் 118 பேரின் பெயர்களையும் வெளியிடுவது அவசியமாகும். இல்லை என்றால் 225 பேரும் சந்தேகத்திற்குரியவர்களாகி விடுவார்கள். ஆகவே அரசாங்கம் அவ்வாறானதொரு தவறினை செய்ய கூடாது. 

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் எழுப்பட்டால் , அது குறித்து சபாநாயகர் சம்மந்தப்பட்ட தரப்பிடம் விளக்கம் கோரினால் தகவல்களை வழங்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணையின் இறுதியில் அறிக்கையை ஜனாதிபதியிடமே ஒப்படைக்கின்றது. இந் நிலையில் இறுதி தீர்மானம் ஜனாதிபதி வசமாகின்றது. அவர் விரும்பினால் அறிக்கையின் முழு விபரத்தையும் வெளியிட முடியாது . 

யாரையேனும் பாதுகாக்க விரும்பினால் அல்லது அந்த அறிக்கையின் விடயங்களை வெளிப்படுத்த விரும்பாத பட்சத்தில் ஜனாதிபதியினால் வெளியிடாமல் இருக்க முடியும். ஏனென்றால் நிறைவேற்று அதிகாரம் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி என்பது நாட்டில் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். இது குறித்த விசாரணைகளும் மக்களின் அவதானத்திற்கு உட்பட்ட விடயமாகும். 

எனவே குறித்த பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய நிறுவனத்திடமோ அல்லது நபர்களிடமோ  பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற 118 பேரின் பெயர்களை வெளியிட வேண்டியது நல்லாட்சி அரசாங்கத்தின் கடப்பாடாகும். விசாரணை அறிக்கையில் குறித்த பெயர்கள் திட்டமிட்ட வகையில் மறைக்கப்பட்டிருந்தால் மக்கள் விரோத செயற்பாடாகும்." என குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51