கொஸ்கம - சீதாவக பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு இரு பெண்கள் மர்ம நபர்களால்  கொலை செய்யப்பட்டுள்ளனர்.

34 வயதுடைய பெண் ஒருவரும் 78 வயதான அவருடைய பாட்டியுமே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளதோடு மீட்கப்பட்ட  சடலங்களை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.