சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை சிகரெட்களை இலங்கைக்கு கடத்திவர முயன்ற இரு சீன பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்தனர். 

இன்று அதிகாலை  5.30 மணியளவில் சீனாவிலிருந்து கட்டுநாயக்கா வந்த யூ.எல். 881 என்ற விமானம் மூலம் குறித்த இருவரும் இலங்கைக்கு வந்துள்ளனர். 

குறித்த இருவர்களையும் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 40,000 சிகரெட்கள் உள்டங்கிய 200 பக்கட்டுகளை மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் சீனாவைச் சேர்ந்த 39 வயதான, 40 வயதான பெண்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் ஆரம்ப கட்ட விசாரணைகள் முடிந்த நிலையில் மேலதிக விசாரணைகளை சுங்க பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.