(ரொபட் அன்­டனி)

மத்­திய வங்கி பிணை­முறி தொடர்பில் விசா­ரணைநடத்­திய ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­வைத்த அறிக்கையை முழு­மை­யாக வெளி­யிட முடியுமா என ஜனா­தி­ப­தியின் செய­லாளர் ஒஸ்டின்  பெர்­னாண்டோ சட்­டமா அதிபர் ஜயந்த  ஜய­சூ­ரி­ய­விடம் ஆலோ­சனை கோரி­யுள்ளார். 

மத்­திய வங்கி பிணை­முறி ஆணைக்­குழு அறிக்­கையை வெளி­யி­டு­மாறு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய, சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி­யினர், ஜே.வி.பி.யினர், பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க அமைச்சர் மலிக் சம­ர­விக்­ரம உள்­ளிட்டோர்  ஜனா­தி­பதி செய­ல­கத்தில் கோரிக்கை விடுத்­துள்ள நிலை­யி­லேயே ஜனா­தி­ப­தியின் செய­லாளர் ஒஸ்டின் பெர்­னாண்டோ இவ்­வாறு சட்­டமா அதி­ப­ரிடம்  ஆலோ­சனை கோரி­யுள்ளார். 

மத்­திய வங்­கிய பிணை­முறி மோசடி தொடர்பில் விசா­ரணை நடத்­திய ஜனா­தி­பதி ஆணைக்­குழு அதன் அறிக்­கையை  ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்­தது.   

அந்த அறிக்­கையை ஜனா­தி­பதி செய­லகம் முழு­மை­யாக வெளி­யி­டாத நிலையில் அதன் ஒரு சில விட­யங்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  நாட்டு மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். 

இந்­நி­லையில் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றிய சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி­யினர் மத்­திய வங்கி பிணை­மு­றி­யுடன் சம்­பந்­தப்­பட்ட ஒரு தனியார் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து நிதியை பெற்­றுக்­கொண்ட 118 பேர் கொண்ட விப­ரங்கள் குறித்த அறிக் ­கையில் இருப்­ப­தாக தெரி­வித்து வரு­கின்­றனர். 

அதன் அடிப்படையிலேயே அந்த அறிக்கையை முழுமையாக வெளியிட முடியுமா? என்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை ஜனாதிபதியின் செயலாளர் கோரியிருக்கின்றார்.