(ஆர்.யசி)

மத்­திய வங்கி பிணை­முறி ஊழ­லுடன் தொடர்­பு­பட்­ட­தாகக் குற்றம் சுமத்தப்­பட்­டுள்ள அர்ஜுன் அலோ­சி­ய­சுக்கு சொந்­த­மான பேப்­பச்­சுவல் ட்ரசரிஸ் நிறு­வ­னத்­தி­டமோ அல்­லது அவர்­க­ளுடன் தொடர்­பு­பட்ட வேறு நிறு­வ­னங்­களில் இருந்தோ பணம் பெற்­றுக்­கொண்­ட­தாக கூறப்­படும் 118 பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­களின் பெயர்­க­ளையும் தமக்கு பெற்­றுத்­த­ரு­மாரு  ஜனா­தி­பதி செய­லா­ள­ரிடம் சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய கோரிக்கை விடுத்­துள்ளார்.  

மத்­திய வங்கி ஊழல் மோச­டி­யுடன் தொடர்­பு­பட்ட நிறு­வ­னங்­க­ளுடன் பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்கள் 118 பேர் பணம் பெற்­றுக்­கொண்டு கடந்த காலங்­களில் செயற்­பட்­டனர் என தற்­போது அர­சியல் தரப்பில் விமர்­சிக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

இதில் முன்னாள் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜெய­சே­கர ஒரு மில்­லியன் ரூபா பணத்தை அர்ஜுன் ஆலோ­சி­யசின் நிறு­வ­னத்தில் இருந்து பெற்­றுக்­கொண்­ட­தாக தெரிய வந்த பின்னர் முன்னாள் அமைச்சர் தயா­சிறி ஜெய­சே­கர அதனை ஒப்­புக்­கொண்­டி­ருந்தார். 

அத­போன்று 118 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இவ்­வாறு பணம் பெற்­றுக்­கொண்­ட­தா­கவும் அந்த அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் உள்­ள­தா­கவும் அவர் பாரா­ளு­மன்­றத்­திலும் , ஊடக சந்­திப்­பு­க­ளிலும் தெரி­வித்­தி­ருந்தார். 

 அமைச்சர் சரத் பொன்­சே­காவும் தன்­மீது சுமத்­தப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்­டி­ருந்தார். எனினும் தாம் தேர் தல் காலங்­களில் பெற்­றுக்­கொள்ளும் நன்­கொடை நிதி­யாக இவற்றை கணித்­த­தா­கவும் இவர்கள் தெரி­வித்­தனர். 

எனினும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 118 பேர் யார் என்­பது குறித்து அறிக்­கையை இது­வ­ரையில் ஜனா­தி­ப­தி­யுடன் இரு ந்து பெற்­றுக்­கொள்ள முடி­யா­துள்­ள­தா­கவும் அதனை வெளிப்­ப­டுத்த வேண்டும் எனவும் பல்­வேறு அர­சியல் கட்­சிகள், அமைச்சர்கள், சிவில் அமைப்­புகள் என அனை­வரும்  அழுத்தம் கொடுத்து வரு­கின்­றனர். இந­நி­லையில்    சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தனக்கு அந்த பெயர் பட்­டியல் விப­ரத்தை வழங்­கக்­கோரி ஜனா­தி­ப­தியை வலி­யு­றுத்தி கடிதம் ஒன்­றினை ஜனா­தி­பதி செய­லாளர் ஒஸ்டின் பெர்­னாண்­டோ­விற்கு அனுப்பி வைத்­துள்ளார். 

நேற்று முன்­தினம் இந்த கடி­தத்தை அனுப்பி வைத்­துள்ளார்.  மேலும் 118 பேரின் பெயர் விபரங்களை வெளியிடக்கோரி  கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணி, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக சபா நாயகர் கரு ஜெயசூரியவிடம் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.