"டார்லிங்2", "எனக்கு இன்னொரு பேர் இருக்கு" ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் மூன்றாவது படத்திற்கு நூறு என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதன் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியானது.

இதைப் பற்றி இயக்குநர் சாம் ஆண்டன் ,

‘நடிகர் அதர்வா, ஹன்சிகா மோத்வானி ஆகியோரின் நடிப்பில் தயாராகும் படம் நூறு. இதில் நாயகன் அதர்வா பொலிஸாக நடிக்கிறார். அத்துடன் இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் நூற்றுக்கு நூறு சதவீதம் திருப்தி படுத்தும் எக்சன் எண்டர்டெயினராக உருவாகவிருக்கிறது. இதற்கான படபிடிப்பினை இந்த மாதத்தில் ஆரம்பிக்கின்றோம்.’ என்றார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டார். இதில் பொலிஸ் உடையில் அதர்வா கம்பீரமாக இருக்கிறார். செல்போன் காலத்தில் இந்த படத்தின் போஸ்டரில் பழைய தொலைபேசி அழைப்புக்குரிய பொத்தான்கள் இடம்பெற்றிருப்பதால் இப்படம் பீரியட் பொலிஸ் படம் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இதனிடையே அதர்வா தயாரித்து நடித்துள்ள "செம போத ஆகாத" படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.