எனக்கு எந்த சாராய ஆலையும் கிடையாது : தினகரன்

Published By: Digital Desk 7

01 Jun, 2018 | 03:21 PM
image

மதுபான தொழிற்சாலை தொடர்பாக விளக்கம் அளிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் தமிழக சட்டபேரவையிலிருந்து தினகரன் வெளிநடப்பு செய்தார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம்,

"இந்த அரசு 810 மதுக்கடைகளை புதிதாக திறக்க முயற்சி செய்கிறது என்று கூறினால் நிதானம் இல்லாமல் பேசுவதாக என்னைப் பார்த்து கூறுகிறார்கள். எனது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மதுபான ஆலை இருப்பதாக கூறுகிறார்கள். எனக்கு எந்த சாராய ஆலையும் கிடையாது.

என் குடும்பம் என்றால் நானும் என் மனைவியும் தான்.  ஒரு வேளை எங்கள் உறவினர் குடும்பத்தினருக்கு மது ஆலை இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அந்த ஆலையில் இருந்து மது வாங்க மாட்டோம் என்று இவர்களால் சொல்ல முடியவில்லை. கோவை அருகே உள்ள தொழிற்சாலைகளில் இவர்களுக்குத்தான் நிறைய பங்கு உள்ளது. இந்த ஆட்சி போகும் போது தொழிற்சாகைளில் யார்? யார்? பினாமி என்பது தெரிந்துவிடும். ’ என்றார்.

முன்னதாக சட்டபேரவையில் தினகரன் பேசுகையில்,

‘2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் 6,672 மதுகடைகளை குறைப்பேன் என்று மறைந்த ஜெயலலிதா குறிப்பிட்டு இருந்தார். அதன் படி பதவியேற்றதும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். பெப்ரவரி மாதம் பிறந்த நாளன்று 500 மதுக்கடைகளை மூடினார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப் படி 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது 3,506 மதுகடைகள் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசாணைப்படி 810 கடைகளை மீண்டும் திறக்க இந்த அரசு முயற்சிக்கிறது. அம்மா வழியில் நடப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்த அரசு மீண்டும் மதுக்கடைகளை திறக் முயற்சி செய்வது சரியா? இதற்கு காரணம் என்ன?" என்றார்.

உடனே அதிமுக உறுப்பினர்கள் குறுக்கிட்டனர். பின்னர் தொடர்ந்து பேச முயன்ற தினகரனின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அவர் சபாநாயகருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் அவையிலிருந்து வெளிநடப்பில் ஈடுப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52