டயர் எரித்து பொகவந்தலாவையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Daya

01 Jun, 2018 | 02:57 PM
image

மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கபட்டவர்களை  தங்கவைக்கபட்ட தற்காலிக இடங்களிலிருந்து வெளியேறுமாறு வழியுருத்தியமையால் தோட்டமக்கள் டயர் எரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

பொகவந்தலாவ ரொப்கில் கீழ் பிரிவு தோட்டத்தில் மணி சரிவில் பாதிக்கபட்ட மூன்று குடியிருப்பாளர்களை சேர்ந்த 15பேரை தற்காலிகமாக தங்கவைக்கபட்டிருந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு தோட்ட நிர்வாகம் வழி யுருத்தியமைக்கும் பாதிக்கபட்டவர்களுக்கு பணிநிறுத்தபட்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை தொழிலுக்கு செல்லாது தோட்ட கொழுந்து மடுவத்திற்கு அருகாமையில் டயர்களை எரித்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த மண்சரிவு அபாயம் காரணமாக 2017ஆம் ஆண்டு  குறித்த தோட்ட லயன் குடியிருப்பிலிருந்து மூன்று  குடும்பங்களை சேர்ந்த  15பேர்  அம்பகமுவ பிரதேச செயலாளர் காரியலத்தின் ஊடாக குறித்த மக்கள் வெளியேற்றபட்டு ரொப்கில் தமிழ் வித்தியாளயத்தின் ஆசிரியர்களின் விடுதியிலும், தோட்டஉத்தியோகத்தரின் விடுதிகளிலும் தங்கவைக்கபட்டதாகவும் தற் பொழுது ஒரு வருடமும் 03மாதங்கள் கடந்துள்ள போதும் தற்பொழுது தோட்டநிர்வாகம் பாதிக்கபட்ட மக்களை வெளியேற கோருவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

மண்சரிவும் கற்பாறைகளும் சரிந்து விழுந்த பகுதியில் நாங்கள் எவ்வாறு சிறு பிள்ளைகளை வைத்து கொண்டு வாழ்க்கை நடத்துவது எனவே பாதிக்கபட்ட மக்களுக்கு மாற்று நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு உரிய வீடுகளை அமைத்து தரு மாறும் எங்கள் பிரச்சினை குறித்து மலையக அரசியல் வாதிகள் நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டுமெனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேரரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56