மனித எலும்புகளை மீட்கும் பணிகள்  தொடர்கின்றது

Published By: Daya

01 Jun, 2018 | 01:32 PM
image

மன்னார் நகர நுழைவாயிலில் அமைக்கப்படவிருந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வு நடவடிக்கைகள் 5 ஆவது நாளாகவும் இன்றும் மேற்கொள்ளப்பட்டது.

'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் ஆகியவை கடந்த திங்கட்கிழமை முதல் மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஒரே நேரத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையில், கலனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மன்னார் நகரசபை, நில அளவைத்திணைக்களம், பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதி நிதிகள், தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ச்சியாக அழ்வுகள் இடம் பெற்று வந்த போது மனித எலும்புகள், பற்கள், தடையப்பொருட்களான பொலித்தீன் பக்கற், சோடா மூடி உள்ளிட்ட சில தடையப்பொருட்கள் அகழ்வின் போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் தொடர்ந்தும் அகழ்வு பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44