இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் கொலையுடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு சந்தேகநபர்களும் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இரத்மலானை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அங்குலான ரொஷான் மற்றும் பையா என்ற பாதாள உலக குழு உறுப்பினர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த  24 ஆம் திகதி இரத்மலானையில் வைத்து தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா இனந்தெரியாதோரின் துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.