பத்திரிகையாளர் போத்தல ஜயந்த தாக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக பத்திரிகை ஆசிரியர் ஒருவரை இன்று தமது அலுவலகத்திற்கு ஆஜராகுமாறு இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கள பத்திரிகையொன்றின் ஆசிரியரிற்கே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

2009 இல் போத்தல ஜயந்த தாக்கப்பட்டமை தொடர்பிலேயே குறிப்பிட்ட பத்திரிகையாளருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

வெளிநாட்டில் அடைக்கலம் புகுந்துள்ள போத்தல ஜயந்த கடந்த வருடம் இலங்கை வந்தவேளை தான் தாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தார்.

பத்திரிகையாளர் கீத் நொயரை தாக்கிய அதே நபரே போத்தலஜயந்தவையும் தாக்கியிருக்கலாம் என சந்தேகம் நிலவுவது குறிப்பிடத்தக்கது.