யாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

கோவில் வீதி நல்லூரை சேர்ந்த 27 வயதான மருதமுத்து கோவிந்தன் என்பவரே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் சித்த சுவாதீனமாக காணப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் வீட்டிலிருந்து காணாமல் போன நிலையிலேயே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.