(எம்.‍எப்.எம்.பஸீர்)

தற்போதைய வானிலையில் இன்று ஜூன் முதலாம் திகதியிலிருந்து சிறிய மாற்றம் ஏற்படுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் மழை வீழ்ச்சி சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அதவதானம் நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையல் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்யக் கூடும் எனவும் கண்டி மாத்தளை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மாணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரையான பலத்த காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மேல், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 50 கீ.மி. வரையான ஓரளவு பலத்த காற்று வீசுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.