பொது இடங்களில் இஸ்லாமியப் பெண்கள் முழு முகத்திரை அணிய டென்மார்க் அரசாங்கம் தடை விதித்துள்ளது. 

இஸ்லாமியப் பெண்கள் முழு முகத்திரை அணிவது  தொடர்பாக அந் நாட்டு சட்டசபையில்  நடைபெற்ற வாக்கெடுப்பில் 75இல் 30 வாக்குகள் எதிராக வந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தடையை மீறி பொது இடங்களில் முகத்திரை அணிபவர்களுக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்கப்படும் என டென்மார்க் அரசாங்கம் எச்சரித்துள்ளது.

சமீபகாலமாக இஸ்லாமியர்களின் முகத்திரைக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்து வரும் நிலையில் டென்மார்க்கும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.