“கொடுந்­தீயே உன்னை ஒருநாள் தீ வைத்துப் பார்க்­கோமோ?”

Published By: Vishnu

01 Jun, 2018 | 09:47 AM
image

(இணு­வையூர் கலா­பூ­ஷணம் ஆ.இர­கு­பதி பால­ஸ்ரீ­தரன்) 

“ஒரு நூல் நிலை­யத்தின் கதவு திறக்­கப்­ப­டும்­போது ஒரு சிறைச்­சா­லையின் கதவு மூடப்­ப­டு­கி­ன்றது” என்றார் சுவாமி விவே­கா­னந்தர்.

இவ்­வாறு புகழ்­பெற்ற யாழ்.நூலகம், பெரும் அறி­வுக்­க­ளஞ்­சியம் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்டு இவ்­வாண்டு ஜூன் மாதம் முதலாம் திக­தி­யுடன் முப்­பத்­தேழு ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கி­விட்­டன; தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட அதே இடத்தில் புதிய நூலகம் கம்­பீ­ர­மாக, புதுப்­பொ­லி­வுடன் திகழ்­கி­ன்றது. எனினும் தீக்­கி­ரை­யான அந்த விட­யத்தை இன்று நினைத்­தாலும் நெஞ்சு வலிக்­கி­றது; இதயம் கனக்­கி­றது; கண்கள் பனிக்­கின்­றன. 

தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட யாழ்ப்­பா­ணத்து பொது­சன நூல­கத்தின் வர­லாற்றை சற்று ஆராய்­வது சாலப் பொருத்­த­மாக இருக்கும். 

1934 ஆம் ஆண்டு ஆனி மாதம் ஒன்­பதாம் திகதி யாழ். நகரில் கலா­நிதி ஐசாக் தம்­பையாவின் தலை­மையில் நடை­பெற்ற கூட்டம் ஒன்றில் பொது நூல் நிலை­யத்­திற்­கு­ரிய தோற்றம் அடி­கோ­லப்­பட்­டது. இக்­கூட்­டத்­தின்­போது செய­லாளர் க.மு.செல்­லப்பா வால் திரட்­டப்­பட்ட ரூபா 1184.25 சதம் மூல­த­ன­மாக பொது நூல­கத்­திற்கு அடிப்­ப­டை­யாக அமைந்­தது. அந்தக் கால­கட்­டத்தில் இது­மிகப் பெரிய தொகை­யாகும். 

பின்னர் அதே ஆண்டு அதா­வது 1934 இல் ஆவணி மாதம் முதலாம் திகதி யாழ். ஆஸ்­பத்­திரி வீதியில், வாடகை அறை ஒன்றில் தமிழ் அன்­பர்­களால்  மன­மு­வந்து அன்­ப­ளிக்­கப்­பட்ட 844 நூல்­க­ளு­டனும் 30 சஞ்­சி­கை­க­ளு­டனும் சிறி­ய­தொரு  நூலகம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. 

வச­திகள் குறைந்து காணப்­பட்ட இந்த நூல­கத்தை 01.01.1935 அன்று யாழ்.பட்­டி­ன­சபை பொறுப்­பேற்று யாழ்.வாடி வீட்­டிற்கு தெற்­கி­லுள்ள மேல்­மாடி வீடொன்­றிற்கு இடம்­மாற்றம் செய்­யப்­பட்டு இயங்­கி­வந்­தது. எனினும் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வந்த வாச­கரின் தேவை­களை அந்த நூல் நிலை­யத்தால் ஈடு­செய்ய முடி­ய­வில்லை. 

“தொட்­ட­னைத்­தூறும் மணற்­கேணி– மாந்­த­ருக்கு கற்­றனைத் தூறும் அறிவு” அல்­லவா? 

எனவே, சகல வச­தி­களும் கொண்ட நவீன நூலகம் ஒன்­றினை அமைக்கும் முயற்சி தமிழ்ப் பெரி­யார்­களால் 1952 ஆம் ஆண்டு ஆனி­ மாதம் 14 ஆம் திகதி  சாம் ஏ.சபா­பதி தலை­மையில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. 

அந்தக் கூட்­டத்­திலேஅல்­பிரட் துரை­யப்பா   நூல­கத்தை நிறு­வு­வ­தற்குத் தேவை­யான நிதியை ஒரு அதிர்ஷ்ட இலா­பச்­சீட்­டி­ழுப்பின் மூலமும் களி­யாட்ட விழாவின் மூலமும் திரட்­டலாம் என்ற கருத்தை முன்­மொ­ழிந்தார். அந்தக் கருத்து ஏனை­யோ­ராலும் ஏக­ம­ன­தாக ஏற்றுக்கொள்­ளப்­பட ஏரா­ள­மான பணம் திரட்­டப்­பட்டு 1953 ஆம் ஆண்டு பங்­குனி மாதம் 29 ஆம் திகதி நூல் நிலை­யத்­திற்­கான  அடிக்கல் நாட்டு விழா சிறப்­பாக நடை­பெற்றது. 

இந்தப் புதிய கட்­டடம் அமை­வதில் பலர் அய­ராத முயற்­சி­களை மேற்­கொண்­டாலும் பின்­வ­ருவோர் மிகவும் குறிப்­பி­டத்­தக்­க­வர்கள். 

வண.பிதா லோங்கின் முயற்­சியால் நூல­கத்­துறை நிபு­ண­ரான கலா­நிதி எஸ்.ஆர். இரங்­க­நாதன் நூல­கத்தின் அமைப்­பிற்­கான திட்­டங்­களை வகுத்­துக்­கொ­டுத்தார். தொடர்ந்து சென்னை அரசுக் கட்­டடக் கலை நிபுணர் கே.எஸ்.நர­சிம்மன் கட்­டட வரை­ப­டங்­களைத் தயா­ரித்து உத­வினார். 

பொது மக்­களின் பூரண ஆத­ர­வுடன் அழ­கிய கட்­டடம் உரு­வாக்­கப்­பட்டு முதற்­கட்டம் பூர்த்­தி­யாகி அன்­றைய யாழ்.முதல்வர் அல்­பிரட் துரை­யப்பாவால் 11.10.1959 ஆம் ஆண்டு திறந்­து­வைக்­கப்­பட்­டது. 

தீய­வர்­களால் தீவைக்­கப்­படும் வரை யாழ்.நூலகம் கொழும்பு பழைய நூல­கத்­தை­விடப் பெரிய நூல­க­மாக, வட­மா­கா­ணத்து தலைமை நூல­க­மா­கவும் இயங்கிச் சிறப்­பித்­தது என்றால் அது சற்றும் மிகை­யா­காது.

மொத்தம் 15,910 சதுர அடி­களைக் கொண்ட விசா­ல­மான நூலகம் கொடி­ய­வர்­களால் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­ட­போது பிர­தம நூலகர் உட்­பட முப்­பத்து மூன்று பேர் கட­மை­யாற்­றி­ வந்­தார்கள். 

பெரி­ய­வர்கள், ஆசி­ரி­யர்கள், கல்­லூரி மாண­வர்கள், சிறு­வர்கள் உட்­பட பல்­லா­யிரம் மக்­க­ளுக்கு அரும்­பெரும் தொண்­டாற்­றி­வந்த இந்த நூல­கத்தை, அறி­வா­ல­யத்தை, அரிய பொக்­கி­ஷத்தை தீக்­கி­ரை­யாக்க எத்­துணை கொடிய உள்ளம் இருந்­தி­ருக்­க­வேண்டும். அந்தப் படு­பா­த­கர்­க­ளுக்கு? 

யாழ்.நூலகம் கொளுத்­தப்­ப­டுமுன் ஒரு பரி­பூ­ர­ண­மான நூல­க­மாக பின்­வரும் பகு­தி­க­ளைக்­கொண்டு சிறப்­பாக இயங்­கி­வந்­தது. நூல்கள் இரவல் வழங்கும் பகுதி, சிறுவர் நூலகம், தின­சரிப் பத்­தி­ரி­கைகள், சஞ்­சி­கைகள், புதின ஏடுகள் கொண்ட வாசி­க­சாலை, கருத்­த­ரங்கு கூடம், உசாத்­துணைப் பகுதி, அலு­வ­லகம், நூல்கள் சேக­ரிப்பு அறை இன்னும் பற்­பல. 

நூலகம் எரி­யூட்­டப்­பட்­ட­வேளை, இரவல் வழங்கும் பகு­தியில் சுமார் 57, 000 நூல்­களும் சிறுவர் பகு­தியில் 8995 நூல்­களும் உசாத் துணைப்­ப­கு­தியில் கிடைத்­த­தற்­க­ரிய 29,500 நூல்­களும் இருந்­தன. இவை அனைத்தும் தீயினால் சிதைக்­கப்­பட்ட, சீர­ழிக்­கப்­பட்­டன என்­பது மிகவும் வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும்.

நூலகம் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட செய்தி கேள்­வி­யுற்ற மாத்­தி­ரத்­தி­லேயே பரி­சுத்த பற்றிக்ஸ் கல்­லூரி ஆசி­ரியர் தாவீது அடி­களார் தன்­னுயிர் நீத்தார்.

இந்த அப்­பட்­ட­மான அறி­வா­லய அழிப்பு பண்­பா­டற்ற படு­கொ­லையைப் பற்றி கேள்­விப்­பட்ட மாத்­தி­ரத்­திலே அன்­றைய தமி­ழக முதல்வர் எம்.ஜி.இரா­மச்­சந்­திரன்   உட­ன­டி­யாக தமி­ழ­கத்தில் அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டி நூல்கள் வழங்கத் தீர்­மா­னித்தார்.

கொழும்பில் யாழ். நூலக வாரம் அனுஷ்­டிக்­கப்­பட்டு கொடி தினம் நடத்­தப்­பட்டு நிதி சேக­ரிக்­கப்­பட்­டது. இலங்­கை­யி­லுள்ள வங்­கிகள் யாழ். நூலகப் புன­ர­மைப்­புக்கு பெரும் நிதி உதவி செய்ய முன்­வந்­தன. பிரித்­தா­னிய அக­திகள் மறு­வாழ்வு நிறுவனம் தானே முன்வந்து பெரும் உதவி புரிந்தது.

நூலகம் எரிக்கப்பட்டு பத்து ஆண்டுகளின் பின்னர் ஐ.தே.க. ஜனாதிபதி ஆர்.பிரேமதாச தீ எரிப்புக்குக் காரணம் ஐ.தே.க அமைச்சர் காமினி திசாநாயக்கவே என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.

யார் எனக்கூறி என்ன பிரயோசனம்? நடந்தது நடந்தது தான்! அழிவு – அழிவுதான்!

ஆனால், ஒன்று மட்டும் உறுதி! நூல்கள் இவ்வையத்தில் உள்ளவரை உலகெங்கும் நூலகங்கள் இயங்கும்வரை இந்த தீய தீ வைப்புச் சம்பவம் அனைவரது இதயத்திலும் மாறாத வடுவாக இருக்கும் என்பது திண்ணம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04