கன்னட சினிமாவின் பிரபல இயக்குனரான சந்தோஷ் கடீல் நீர்வீழ்ச்சியொன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கன்னட சினிமாவில் "கனசு கன்னு டெரேத்தா" என்ற படத்தை இவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் ,நேற்று (30-05-2018) காலை தனது நண்பர்களுடன் புகைப்பட படப்பிடிப்பிற்காக இராமி நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதன் போது , கடும் மழை பெய்து கொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு அவர் ஒருசில காட்சிகளை படப்பிடிப்பு செய்தபோது மழையில் கால் தவறி நீருக்குள் விழுந்துள்ளார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். 

எனினும் , மீட்கப்படும் முன் அவர் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.