கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை  அறிவித்துள்ளது.

அந்த வகையில் கம்பஹா மாவட்டத்தின் களனி, பேலியாகொடை, வத்தளை, ஜா-எல, பியகமுவ, தொம்பே, கம்பஹா, கட்டுநாயக்கா, சீதுவ மற்றும் மஹர ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

நாளை இரவு 7 மணி முதல் அடுத்து வரும் 12 மணி நேரம் வரை இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.