(கே.லாவண்யா)

Militzer & Munch  சரக்கு மற்றும் தளபாட கப்பல் போக்குவரத்து தீர்வு வழங்குனர் நிறுவனம் தமது இந்து சமுத்திர மற்றும் ஆசிய பிராந்தியங்களுக்கான எதிர்கால கப்பல் சரக்குகளை கையாளுவதற்கான கேந்திர நிலையமாக இலங்கை தன்னை பலப்படுத்துவதற்கான ஒத்துழைப்பினை வழங்கும் என M & M நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் டிலும் ஸ்டெம்போ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  இடம்பெற்ற Militzer & Munch  நிறுவனத்தின் அறிமுக நிகழ்விலே அந்நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் டிலும் ஸ்டெம்போ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையின் அமைவிடமானது கடற்படை மற்றும் கப்பற்போக்குவரத்து தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமையப்பெற்றுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் சரக்கு மற்றும் கொள்கலன் கையாளுகையில் விருத்தி ஏற்பட்டமையானது இலங்கையில் கப்பற் போக்குவரத்து துறையின் வளர்ச்சியினை விளக்குகிறது. ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி மாநாட்டில் வெளியிடப்பட்ட Liner Shipping Connectivity Index 2017 சஞ்சிகையில் சர்வதேச ரீதியில் 15 ஆவது இடத்தை இலங்கை பெற்றுள்ளது.

இலங்கையை கடற்படை மற்றும் கப்பற் போக்குவரத்திற்கான கேந்திர நிலையமாக உருவாக்குவதே இலங்கை அரசாங்கத்தின் இலக்காகும். இதனை நிலை நிறுத்துவதற்கு M & M  நிறுவனம் தமது சரக்கு கையாளுதல்களை இலங்கையில் ஸ்திரப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இலங்கையில் தற்கால ஏற்பாட்டியியல் மற்றும் கப்பற் போக்குவரத்து ஏற்ற வகையில் இலங்கை துறைமுக அதிகாரசட்டம் மற்றும் வணிக கப்பற் சட்டம் ஆகியவற்றை மறுசீரமைக்க முன்மொழிவு மேற் கொள்ளப்பட்டமையானது பாராட்டத்தக்க விடயமாகும். இலங்கையின் போக்குவரத்து துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் 2017 இல் இலங்கையின் சேவைத்துறையினை விரிவாக்கியது.

மேலும், 2018 ஆம் ஆண்டிலும் இவ்வளர்ச்சியினது அனுகூலங்களை பார்க்கக்கூடிதாக இருக்கும். இலங்கையின் 2025 ற்கான தொலை நோக்குக்கமைய ஆரோக்கியமான போட்டித்தன்மை நிலவுகிறது. இது இலங்கையில் சர்வதேச போக்குவரத்து நிறுவனம் மற்றும் ஏற்பாட்டியியல் நிறுவனங்களின் செயற்பாடுகளை விரிவடையச் செய்துள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்ட M & M சர்வதேச கையாளுகை நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி லோதர் தோமா தெரிவிக்கையில், 

"நிறுவனம் 1880 ல் ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது சுவிட்சர்லாந்தினை தளமாக கொண்ட Transinvest குழுமத்தின் ஓரங்கமாக இயங்கிவருகின்றது. இது 100 இடங்களில் 25 நாடுகளில் செயற்பட்டு வருகின்றது. இதனூடாக வான் , கடல், தரை மற்றும் ரயில் வழிப்போக்குவரத்துக்களும் மேற்கு , கிழக்கு ஐரோப்பிய , பொதநலவாய சுதந்திர நாடுகள், மத்திய கிழக்கு, தூர கிழக்கு மற்றும் மெஹரப் ஆகிய கிளை வலையமைப்புக்களுக்கான திட்ட போக்குவரத்தினையும் வழங்கப்பட்டு வருகின்றது 

M % M நிறுவனம் இலங்கையின் கப்பற்போக்குவரத்துக்குள்ள சாத்தியப்பாடுகள் குறித்து பாரிய எதிர்பார்ப்பபுக்களை கொண்டுள்ளது." என்றார். 

இந் நிகழ்வில் நிதி மற்றும் இராஜாங்க அமைச்சர் எரான் விக்கரமரத்ன, M % M   குழுமப் பிரதிநிதி தாட்டியானா ஷேபர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.