தொழிலாளர் நீதிமன்ற மேலதிக நீதிபதியின் கார் விபத்தில் அம்புலன்ஸ் வண்டியின் ஓய்வுபெற்ற சாரதியொருவர்  படுகாயமடைந்த சம்பவமொன்று மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சந்திவெளியைச் சேர்ந்த 60 வயதுடைய சன்முகம் பேரின்பம் என்பவர் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக நீதிபதி மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்குச் சென்றுகொண்டிருந்த வேளை சந்திவெளி பிரதேசத்தில் இந்த அம்புலன்ஸ் வண்டியின் ஓய்வுபெற்ற சாரதி துவிச்சக்கர வண்டியில் குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதியைக்கடந்து எதிரே உள்ள குறுக்கு வீதிக்குச் சென்றவேளை பிரதான வீதியால் பயணித்த நீதிபதியின் காரில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர்ப் பொலிஸார்  இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.