விஜய் சேதுபதி தன்னுடைய அரசியல் ஆசை குறித்து மனம் திறக்கிறார்.

தற்போது தென்காசியில் படப்பிடிப்பிலிருக்கும் விஜய் சேதுபதியிடம் உங்களுக்கு அரசியலில் ஈடுபட ஆசையிருக்கிறதா? என கேட்டபோது,

நான் நிச்சயமாக அரசியலுக்கு வரமாட்டேன். காரணம் எமக்கு மக்கள் மீது அக்கறை இருக்கும் அளவிற்கு அரசியல் அறிவு இல்லை. அதற்கான எண்ணம் கூட இல்லை.

அரசியல் அறிவு, சிந்தனை, சித்தாந்தம் போன்றவை இல்லாமல் குறித்த இடத்தில் போய் அமரக்கூடாது.

இங்கே நடப்பது சரி என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.மற்றொரு தரப்பினரோ இது தவறு என்று சொல்கிறார்கள். எனவே தெளிவான முடிவை எம்மால் எடுக்க முடியவில்லை.

இன்றைய இளைய தலைமுறையினரும், இளைஞர்களும் அப்படியில்லை. ஒவ்வொரு விடயத்திலும் தெளிவாக செயற்படுகிறார்கள். அரசியல் அறிவுடன் இயங்குகிறார்கள். அவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.