இயற்கை எரிவாயு, எண்ணெய் வளத்தை ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

Published By: Daya

31 May, 2018 | 01:52 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பெற்றோலிய வளங்கள்அபிவிருத்தி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

குறித்த ஒப்பந்தமானது உலகின் மிகப்பெரிய எரிபொருள் சேவை வழங்கும் நிறுவனமான ஸ்க்லம்பர் நிறுவனத்தின் உபநிறுவனமான ஈஸ்டன் எக்கோ டி.எப்.சீ.சீ. நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் மற்றும் இலங்கை அரசு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அரசு சார்பாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஒப்பந்தத்தில் கையெலுத்திட்டுள்ளார்.

இந்நிகழ்வின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர், 

குறித்த உடன்படிக்கை மூலம் எதிர்காலத்தில் நாட்டுக்கு பல பயன்கள் கிடைக்கப்பெறும். 

குறித்த ஒப்பந்தம் கைசாத்திடப்படுவதற்கு நீண்ட காலம் எடுத்திருந்தாலும், தற்போது கைசாத்திடப்பட்டுள்ளமை பாரிய வெற்றியாகும்.

குறித்த ஒப்பந்தம் பத்துவருடத்துக்கு உட்பட்டதாகும். எமது எதிர்பார்ப்பு இந் நிறுவனத்திலிருந்து நிபந்தனையின் கீழான பல்துறை சேவைகளாகும்.

குறித்த நிறுவனம் ஆய்வுப் பணிகளுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட எதிர் பார்த்துள்ளது.  ஆய்வுப்பணிகள் மூலம் பெறப்படும் அனைத்து தரவுகளும் அரசுக்கே சொந்தமாகும். எமது அமைச்சும் அரசும் ஒவ்வொரு தகவல்களுக்கும் வருமானத்தை பெற்றுக்கொள்ளும்.

நாங்கள் பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பே இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38