4 வயது சிறுவன் ஒருவன் சலவை இயந்­தி­ரத்தின் மீது ஏறி விளை­யாடி அந்த இயந்­தி­ரத்­துக்குள் விழுந்து சிக்கிக்கொண்ட சம்­பவம் கிழக்கு சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. ஷான்டொங் மாகா­ணத்­தி­லுள்ள ஸிபோ நகரில் இந்த சம்­பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்­படி சிறுவன் சலவை இயந்­தி­ரத்தில் விழுந்து அழு­வதைக் கேட்டு அங்கு வந்த அவ­னது தாயார் அவ­னது நிலை கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்ள நிலையில், அவர் அந்த சலவை இயந்­தி­ரத்தின் உருளைக் கட்­ட­மைப்பில் சிக்­கி­யி­ருந்த தனது மகனை விடு­விக்க மேற்­கொண்ட முயற்சி தோல்­வியைத் தழு­வி­யது.

இத­னை­ய­டுத்து அவ­ச­ர­சேவைப் பிரி­வி­ன­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. தொடர்ந்து சம்­பவ இடத்­திற்கு வந்த அவ­சர சேவை உத்­தி­யோ­கத்­தர்கள் 22 நிமிட பெரும் போராட்­டத்தை மேற்­கொண்டு அந்த சலவை இயந்­தி­ரத்தின் வெளிப் பாகத்தை வெட்டி சிறு­வனை மீட்­டுள்­ளனர்.