சட்ட விரோதமான முறையில் 100 தங்க பிஸ்கட்டை இலங்கைக்கு கடத்திவர முயன்ற  போலந்து  பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

 இன்று  அதிகாலை 8.50மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே. 650 என்ற விமானம் மூலம் குறித்த நபர் இலங்கைக்கு வந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் 60 வயதான போலந்து நாட்டு பிரஜையே என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த நபரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது  சுமார் 6,75,0000 இலட்டம் ரூபா பெறுமதியான 100 தங்க பிஸ்கட்களை குறித்த நபர் தனது இடுப்பில் கட்டப்பட்ட ஒரு சிறப்பான பட்டியில் மறைத்து வைத்திருந்ததாக சுங்க ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.