கீத் நொயாரின் உயி­ருக்கு ஆபத்து நேர்ந்தால் அர­சாங்­கத்­தி­லி­ருந்து உடன் வெளி­யே­றுவேன்

Published By: Daya

31 May, 2018 | 12:00 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் கடத்­தப்­பட்ட இரவில் நேஷன் பத்­தி­ரி­கையின் அப்­போ­தைய ஆசி­ரியர் லலித் அழ­கக்கோன், உரி­மை­யாளர் கிரி­ஷாந்த குரே ஆகியோர் என்னை தொடர்­பு­கொண்­டனர். கீத் நொயார் கடத்­தப்­பட்­டுள்­ள ­தா­கவும் அவரை எப்­ப­டி­யேனும் மீட்­டுத்­த­ரு­மாறும் அவர்கள் என்­னிடம் கோரினர்.

அத­னை­ய­டுத்து நான் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு அழைத்தேன். அவ­ரிடம், கீத் நொயார் கடத்­தப்­பட்­டுள்ளார். நிச்­சயம் இது திட்­ட­மிட்ட நட­வ­டிக்கை. இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் தொடர்­வதால் அர­சாங்­கத்தில் இருக்க வெட்­கப்­ப­டு­கின்றேன்.

கீத் நொயா­ருக்கு எந்த ஆபத்தும் ஏற்­படக் கூடாது. அவ­ரது உயி­ருக்கு ஆபத்து நேர்ந்தால் அமைச்சுப் பத­வியை துறந்து, பிரா­யச்­சித்­த­மாக கார­ணத்தை அறி­வித்­து­விட்டு அர­சாங்­கத்­தி­லி­ருந்து உடன் வெளி­யே­றுவேன் என்று கூறினேன். அதற்கு அவர் அவ­சரப் பட வேண்டாம்,  கீத் நொயா­ருக்கு எதுவும் ஆகாது என கூறினார். 

 அப்­போ­தைய உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்­சரும் தற்­போ­தைய சபா­நா­ய­க­ரு­மான கரு ஜய­சூ­ரிய குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வாக்கு மூலம் அளித்­துள்ளார்.

 த நேஷன் பத்­தி­ரி­கையின் முன்னாள் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்டு சட்ட விரோ­த­மாக தடுத்து வைக்­கப்­பட்­டமை, சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டமை, ஆயு­தத்தால் தாக்­கப்­பட்­டமை, கொலை செய்ய முயற்­சிக்­கப்­பட்­டமை மற்றும் நெயார் குடும்­பத்­தி­ன­ருக்கு கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்ட சம்­பவம்  தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களில் ஓர் அங்­க­மாக கடந்த 22 ஆம் திகதி சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் பெற்­றுக்­கொண்ட வாக்கு மூலத்­தினை நேற்று குற்றப் புல­னாய்வுப் பிரிவு மேல­திக விசா­ரணை அறிக்கை ஊடாக கல்­கிசை மேல­திக நீதிவான் லோச்­சனா அபே­விக்­ர­ம­வுக்கு சமர்­பித்­தது. 

இதன்­போதே சபா­நா­ய­கரின்  மேற்­படி வாக்கு மூலத்தை குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பி.எஸ்.திசேரா,  விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா ஆகி­யோ­ருடன் மன்றில் ஆஜ­ரான  சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம திறந்த மன்றில் நீதி­வானின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்தார்.

இத­னை­ய­டுத்து அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அப்­போ­தைய பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை அழைத்­த­தா­கவும், கோத்­த­பாய முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்ன, உளவுத் துறை பிர­தானி ஹெந்த விதா­ர­னவை அழைத்­துள்­ள­தா­கவும், ஹெந்த வித்­தா­ரன இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி,  இவ்­வி­வ­கா­ரத்தில் 8 ஆம் சந்­தேக நப­ரான அமல் கரு­ணா­சே­க­ரவை அழைத்­துள்­ள­தா­கவும், அமல் கரு­ணா­சே­கர முதல் சந்­தேக நப­ரான மேஜர் புளத்­வத்­த­வுக்கு அழைப்பை ஏற்­ப­டுத்­தியே கீத் நொயார் மீதான தாக்­கு­தல்கள் நிறுத்­தப்­பட்டு அவர் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்  சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம மன்றின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்தார்.

 நேற்­றைய தினம் கீத் நொயார் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது ஏற்­க­னவே கைதாகி பிணையில் உள்ள இரா­ணு­வத்தின் புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஆர்.டி.எம்.டப்­ளியூ.புளத்­வத்த, எஸ்.ஏ.ஹேம­சந்­திர, யூ.பிரபாத் வீரகோன், பி.எல்.ஏ.லசந்த விம­ல­வீர, எச்.எம். நிசாந்த ஜய­தி­லக, எம்.ஆர். நிசாந்த குமார , சி. ஜய­சூ­ரிய ஆகி­யோ­ருக்கு  மன்றில் ஆஜ­ராக வேறு திகதி கொடுக்­கப்­பட்­டுள்­ளதால் அவர்கள் ஆஜ­ரா­க­வில்லை.

எனினும் 8 ஆவது சந்­தேக நப­ராக கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பிர­தா­னியும் முன்னாள் இரா­ணுவ படைப் பிரி­வு­களின் பிர­தா­னி­யு­மான முன்னாள் பதில் இரா­ணுவ தள­பதி அமல் கரு­ணா­சே­கர சிறைச்­சாலை அம்­பி­யூலன்ஸ் வண்­டியில் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டார். 

அம்­பி­யூலன்ஸ் வண்­டியிலிருந்து அவர் சக்­கர நாற்­கா­லி­யி­லேயே கல்­கிசை மேல­திக நீதிவான் நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்டார். இந் நிலை­யி­லேயே வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

 இதன்­போது குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் திசேரா, சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா ஆகி­யோ­ருடன் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­லக ஆஜ­ரானார். வழ­மை­யாக ஆஜ­ராகும் சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம சுக­யீனம் கார­ண­மாக நேற்று மன்றில் ஆஜ­ரா­க­வில்லை.

8 ஆம் சந்­தேக நப­ரான மேஜர் ஜெனரல் அமல் கரு­ணா­சே­கர சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி நலின் இந்­தி­ர­திஸ்ஸ தலை­மை­யி­லான குழு­வினர் ஆஜ­ரா­கினர்.

 இந் நிலையில் மன்றில் மேல­திக விசா­ரணை அறிக்­கையை விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா கைய­ளிக்க, கருத்­துக்­களை முன்­வைத்த சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம தெரி­வித்­த­தா­வது,

கடந்த தவ­ணையில் இந்த சம்­ப­வத்­துடன் முன்னாள் இரா­ணுவத் தள­பதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவின் தொடர்பு குறித்து விசா­ர­ணை­களில் அவ­தானம் செலுத்த உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தது. அது குறித்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

 சரத் பொன்­சே­காவின் தொடர்பு குறித்து நாம் 8 ஆவது சந்­தேக நப­ரான அமல் கரு­ணா­சே­க­ர­விடம் சிறையில் வைத்து விசா­ரித்து வாக்கு மூலம் பெற்றோம்.

 அதில் சரத் பொன்­சேகா கீத் நொயார் விவ­காரம் தொடர்பில்  எவ்­வித தொடர்­பு­க­ளையும் கொண்­டி­ருக்­க­வில்லை என சந்­தேக நபர் வாக்கு மூலம் அளித்­துள்ளார்.

 இந் நிலையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்கள் உள்­ளீட்­டோரின் கைய­டக்க, ஏனைய தொலை­பேசி இலக்­கங்கள் தொடர்பில் 2008.05.20 முதல் 2008.05.23 வரை­யான காலப்­ப­கு­திக்­கு­ரிய தொலை­பேசி இலக்­கங்­களை மையப்­ப­டுத்­திய பகுப்­பாய்வு, கோபுர தக­வல்­களும் பெறப்­பட்டு ஆய்வு செய்­யப்­பட்­டது. இதன்­போதும் சரத் பொன்­சே­கா­வுக்கு இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­புகள் இருப்­பது குறித்து எந்த ஆதா­ரங்­களும் இல்லை.

 இந் நிலையில் நாம் இந்த விவ­காரம் தொடர்பில் சுயேட்­சை­யாக வாக்கு மூலம் வழங்­கிய சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவின் வாக்கு மூலத்­தையும் பதிவு செய்தோம். அதில் அவர், ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் கடத்­தப்­பட்ட இரவில் நேஷன் பத்­தி­ரி­கையின் அப்­போ­தைய ஆசி­ரியர் லலித் அழ­ககோன், உரி­மை­யாளர் கிரி­ஷாந்த குரே ஆகியோர் என்னை தொடர்­பு­கொண்­டனர்.

கீத் நொயார் கடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அவரை எப்­ப­டி­யேனும் மீட்­டுத்­த­ரு­மாறும் அவர்கள் என்­னிடம் கோரினர். அத­னை­ய­டுத்து நான் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு அழைத்தேன்.

அவ­ரிடம், கீத் நொயார் கடத்­தப்­பட்­டுள்ளார். நிச்­சயம் இது திட்­ட­மிட்ட நட­வ­டிக்கை. இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அர­சாங்­கத்தில் இருக்க வெட்­கப்­ப­டு­கின்றேன்.

கீத் நொயா­ருக்கு எந்த ஆபத்தும் ஏற்­படக் கூடாது. அவ­ரது உயி­ருக்கு ஆபத்து நேர்ந்தால் அமைச்சுப் பத­வியை துறந்து, பிரா­யச்­சித்­த­மாக கார­ணத்தை அறி­வித்­து­விட்டு அர­சாங்­கத்­தி­லி­ருந்து உடன் வெளி­யே­றுவேன். எனக் கூறினேன். என தெரி­வித்­துள்ளார்.

இந்த வாக்கு மூலங்கள், தொலை­பேசி அழைப்­புக்கள் குறித்த பகுப்­பாய்வு நட­வ­டிக்­கைகள், சம்­ப­வத்தை நேரில் பார்த்த லான்ஸ் கோப்­ரலின் வாக்கு மூலங்­களை ஒப்­பீடு செய்து நோக்கும் போது இந்த குற்றம் தொடர்­பி­லான சந்­தேக நபர்­களின் செயற்­பாடு தொடர்பில் தெளிவாகிறது.

 இந் நிலையில் தீர்க்கமான இந்த விசாரணைகளை முன்னெடுத்து செல்ல சந்தேக நபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கோருகின்றோம். என்றார்.

 எனினும் சந்தேக நபரான அமல் கருணாசேகரவின் சட்டத்தரணிகள் அமல் கருணாசேகரவுக்கு இந்த குற்றத்துடன்  தொடர்பு இல்லை எனக் கூறி பிணை கோரினர்.  தொலைபேசி அழைப்புக்கள் எடுக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட போதும், அதில் கீத் நொயார் தொடர்பில் பேசப்படவில்லை எனவும் அதன் உள்ளடக்கம் தெரியாது குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிவான் அமல் கருணாசேகரவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் வழக்கை  எதிர்வரும் ஜூன் 13 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56