மே மாதம் 31 ம் திகதி  சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத்தினமாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  வருடாந்தம் இத் தினத்தில் காலத்திற்கேற்ற  தொணிப்பொருள் முன்வைக்கப்பட்டு விழிப்புனர்வூட்டும் செயற்பாடுகள் சர்வதேசரீதியாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள தொணிப்பொருள் “புகையிலையும் இருதய நோய்களும்”என்பதாகும் 

ஏனென்றால் புகைப்பவர்களில் 80 வீதமானோருக்கு தொற்றாத நோய்கள் ஏற்படுவதுடன், இருதயகுழாய் சார்ந்த நோய்கள், இரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள்,மாரடைப்பு என்பனவும் ஏற்படுகின்றன. குறிப்பாக 12 வீதம் இருதநோய் மரணங்களுக்கு நேரடிக்காரணியாக புகையிலை பாவனை அமைகின்றது.

இலங்கையில் புகையிலை பாவனையின் நிலை பற்றிய கண்ணோட்டம்

மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் ஆய்விற்கு ஏற்ப இலங்கையில் தற்போது சிகரட் பாவனை 31.9 வீதமாகும். மேலும் சிகரட் உற்பத்தி 2000 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டுவரை ஒப்பிடும் போது சிகரட் உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு பின்வரும் வரைப்பட்ம் சான்று பகிர்கிறது.

ஆனாலும் அவர்களுடைய இலாபத்தில் பாரிய முன்னேற்றம் காணப்படுகின்றமை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்கான பிரதான காரணம் சிகரட் ஒன்றின் மூலம் கிடைக்கும் இலாபத்தை மிகவும் நுட்பமான முறையில் அதிகரிக்கின்றனர். அண்மையில் அரசாங்கத்தினால் சிகரட் ஒன்றிற்கான வரியை 5.3 வீதமாக அதிகரிக்கும் போது சிகரட் உற்பத்தி நிறுவனம் அதற்கான விலையை 8.7 வீதத்தினால் அதிகரித்துள்மை போன்ற நிறுவனத்தின் விற்பனை நுணுக்கங்களை குறிப்பிடலாம்.  

ஆரம்பத்தில் பஸ்வண்டி,புகையிரத வண்டி போன்ற பொது  போக்குவரத்து சேவைகளில் அதிகமானோர் புகைப்பிடித்தனர். ஆனால் இன்று அது முற்றாக மாறியுள்ளது.

முன்னர் அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது சிகரட் பாவனையை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் காணப்பட்டன.ஆனால் இன்று அவ்வாறான அணுசரனைகள் தடைசெய்யப்பட்டுள்ளது.

மக்கள் நடமாடும் பொது இடங்களில் சிகரட் விளம்பரங்கள் அடங்கிய விளம்பர பதாதைகள் காணப்பட்டன. ஆனால் இன்று  விளம்பர தடை  சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடங்களில் சிகரட் பாவனை தொடர்பான விழிப்புனர்வு நிகழ்ச்சிகள் மிகவும் அரிதாக காணப்பட்ட போதிலும் இன்று அனைத்து அரச கட்டமைப்புகளிலும் சிகரட் பாவனை தடுப்பு திட்டங்கள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இலங்கையில் ஊடகங்களில்  விளம்பரங்களில் சிகரட் விளம்பரங்கள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

புகையிலை உற்பத்தியின்  தொடர்பாகவும் அதன் பாதிப்புகள் தொடர்பாகவும் தெளிவுபடுதட்தப்பட்டு ,அதனை  தடைசெய்து மாற்று பயிர்ச்செய்கை மேற்கொள்ள  சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் புகையிலை பாவனையைக் கட்டுப்படுத்த பல்வேறுப்பட்ட நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டு வருவது காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக பாடசாலையிலிருந்து 100 தூரத்திற்கு சிகரட் விற்பனை செய்ய முடியாது, தனி சிகரட் விற்பனை செய்ய முடியாது.

சிகரட் பாவனையை கட்டுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம்

சர்வசேரீதியாக 7 மில்லியன் உயிர்கள் புகைத்தலினால் காவுக்கொள்ளப்படுகின்றனர். இதில் 80 வீதம் ஆன மரணங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலே ஏற்படுகின்றன. இலங்கையில் சராசரியாக 60 பேர் புகைத்தல் பாவனையினால் மரணமடைகின்றனர். இது வருடத்திற்கு சராசரியாக 20 ஆயிரம் பேரை கொன்று குவிக்கின்றது. சிகரட் புகைத்து மரணிப்பதற்கு முன்னால் தொற்றாத நோய்களான இருதய நோய், மாரடைப்பு, புற்று நோய், சக்கரை வியாதி, ஆஸ்மா , குருதிகலங்களில் ஏற்படும் நோய்கள் போன்றன ஏற்பட்டு அவதிப்படுகின்றன. 

இலங்கையில் தோற்றாத நோய்கள் ஏற்படுவதற்கான காரணியாக சிகரட் சர்வதேச ரீதியாக 12வீதம் ஆன இருதநோய் மரணங்களுக்கு நேரடிகாரணமாக சிகரட் பாவனை அமைகின்றது. அது மட்டுமன்றி இரண்டாம் நிலை புகைத்தலினால சுமார்  6 இலட்சம் பேர் சர்வதேசத்தில் மரணிக்கின்றனரா?

சிகரட் புகையினால் நோய்வாய்படுவதற்கு முன்னரே முகங்கள் அவலட்சனமாகி, உதடுகள் கருத்து , பற்களில் காவிபடிந்து, கண்னங்களில் குழிவிழுந்து , இளம் வயதாக இருப்பினும் ஒரு வயது போன தோற்றத்தை அடைந்து உடலிலிருந்தும் வாயிலிருந்தும் நெருங்க முடியாத அளவு துர்நாற்றம் ஏற்பட்டு அசோகரியம் பாடவேண்டிய நிலை புகைப்பவர்களுக்கு ஏற்படுகின்றனர்.

பொதுவாக சிகரட் புகைப்பவர்களுக்கு பாலியல் உறுப்பியல் உள்ள குருதிக்கலங்களில் நிக்கோர்ட்டின் படிவதனால் குருதிகொண்டு செல்லப்படுகின்ற அளவு குறைவடைந்து பாலியல் பலவீனம் ஏற்படுகின்றது.

இலங்கை அரசு புகைத்தலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 80 பில்லியன் ரூபாய் செலவிடுகின்றது. ஆனால் இது அறியப்பட்ட செலவு மாத்திரமே.அரியப்படாத பல  செலவுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக சிகரட் புகைத்து ஆகால மரணமாகிய ஒருவரின் மனைவி எதிர்நோக்கும் பிரச்சினைகள், பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இங்கு கருத்தில் கொள்ளப்படவில்லை.

வரிய குடும்பங்களில் பொருளாதாரப்பிரச்சினைக்கு நேரடிக்காரணமாக அமைவது இந்த சிகரட் பாவனையாகும். புகையிலைக் கம்பனிகள் அதிகமான இலாபங்கள் ஈட்டினாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது குறைவு. ஏனெனில் அவர்களுடைய வாடிக்கையாளர்கள் 60பேர் நாளொன்றுக்கு மரணிக்கின்றனர்.அதனால் ஆகக் குறைந்தது 80 புதிய வாடிக்கையாளர்களையாவது இலக்குவைத்து அவர்களுடைய விளம்பரங்களை செய்தால் மாதத்திரமே நிலையான வியாபாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். அதனாலேயே சிகரட் கம்பனி இளைஞர்களை ஈர்த்தெடுப்பதற்குப் பல நுட்பமான விளம்பரங்களை மேற்கொள்கின்றனர். திரைப்படங்களில் நாடகங்களில் மட்டுமல்ல. சிறுவர்கள் விரும்பிப் பார்கும் காட்டூன்களிலும் சிகரட் விளம்பரங்களை உள்ளடக்கியிருக்கின்றனர்.ஏனைய மொழித்திரைப்படங்களை விட தமிழ் மொழி சார்ந்த திரைப்படங்களிலே அதிகமான சிகரட் விளம்பரங்களை உள்ளடக்கியிருப்பதானது 2016ம் ஆண்டு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட 3மாத காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் மொத்தமாக 22 திரைப்படங்களில் 2.30 மணித்தியாளம் சிகரட் உற்பட ஏனைய போதைப்பொருள் விளம்பரப்படுத்தப்பட்டமை கண்டறியப்பட்டன. 

சிகரட் பாவனை குறைவடைந்து வருவதனால் இங்கு மகிழ்ச்சி அடைவதோடு இறுதிக்கட்ட நிலையில் எமது பிள்ளைகளை பாதுகாப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது எமது பிள்ளைகளை ஏமாற்றி சிகரட் புகைக்க பழக்கும் நுட்பமுறைகளை அறிந்து அவற்றை பலமிலக்கச் செய்ய முன் வர வேண்டும். இதனை ஆரம்பிப்பதற்கு புகைத்தல் எதிர்ப்புத் தினம் சிறந்த சந்தரப்பமாகும். 

இம்முறை புகைத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டியேனும் புகைத்தில் ஈடுபடுதல் மற்றும் புகையிலை விற்பனையில் ஈடுபடுதல் போன்றவற்றை தவிர்ப்பதற்கு மனப்பூர்வமாக ஒன்றிணைவோம். 

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்.