வவுனியா நகரசபை ஊழியர்கள் இன்று காலை 8மணியிலிருந்து 10மணிவரையும் அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றுனை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

கடந்த வாரம் வவுனியா நகரசபை தலைவருக்கு வவுனியா சிறைச்சாலையின் பாதுகாவலரினால் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கண்டனமும் அடையாள வேலை நிறுத்தமும் இன்று நகரசபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது. 

இதற்கு ஆதரவாக செட்டிகுளம் பிரதேச சபையும், நெடுங்கேணி பிரதேச சபையும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையும், சிங்கள பிரதேச சபையும் தமது ஆதரவினையும் வழங்கியிருந்தனர். 

காலை 8மணியிருந்து 10மணிவரையும் இடம்பெற்ற அடையாள பணிப்பறக்கணிப்பு போராட்டத்தின் இறுதியில் தேசிய அரச பொது ஊழியர் சங்கத்தின் ஆலோசகர் கிதாஞ்சலியும் கலந்துகொண்டார்.

10மணியளவில் அடையாள போராட்டத்தினை மேற்கொண்ட பின்னர் தமது கடமைகளுக்கு ஊழியர்கள் சென்றதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய  செய்தியாளர் தெரிவித்தார்.