கொழும்பு ஆமர் வீதி, ஜயத்தவன விகாரைக்கு முன்னால் சற்று முன் நடந்த பேருந்து விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று காலை இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விபத்தில் பலியான பெண் உடல் சிதைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.