மல்லாவி - மாங்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் மது போதையுடன் தலைக் கவசம் அணியாமல் பயணித்த போது வன்னி விழான்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர் என்பது  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

மல்லாவி அணிஞ்சியன்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான முருகன் நளின் என்ற இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த 24 வயதான சிவலிங்கம் ஜெகன் என்ற இளைஞர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.