வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் இன்று  அதிகாலை திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை வழமை போன்று குறித்த கல்வி நிலையத்திற்கு ஊழியர்கள் சென்ற சமயத்தில் தளபாடங்கள் அங்காங்கே சிதரிய நிலையிலும் கதவுகளும் திறந்த நிலையிலும் காணப்பட்டுள்ளது.

 வவுனியா பொலிஸ் நிலையத்தில் நிறுவனத்தின் உரிமையாளரினால் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.