மடுல் சீமை தேயிலை பயிர்செய்கை நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ தெரேசியா தோட்ட தேயிலை தொழிற்சாலையில் தீ பரவல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,

இன்று விடியற்காலை 05மணி அளவில்  தீ பரவியதாக பொகவந்தலாவ பொலிஸார்

தெரிவித்தனர்.

தேயிலை தொழிற்சாலையின் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாகவே தீ பரவியதாக தெரிவிக்கின்றனர். 

குறித்த தீயிணை பரவவிடாமல் பொதுமக்கள், பொலிஸ் அதிகாரிகள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 குறித்த தேயிலை தொழிற்சாலையில் பெரும்மளவிற்கு பாதிப்புகள் எதுவும் ஏற்பட வில்லையெனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.