உண்மைகளை நிலை நாட்டுவதும், இலங்கை நாட்டின் ஜனநாயக பண்புகளை நிலை நிறுத்துவதும்  நம் அனைவரினதும் அர்ப்பணிப்புடன் கூடிய பொறுப்பாகும் என பாராளுமன்ற  உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமை குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் கருத்துருவாக்கமானது வலுப்பெறவேண்டும். அதன் வலிமைகளை  உணர்த்தும் ஊடகவியலாளர்களை ஊமையாக்குவதும் அவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.

கருத்துணர்வை பக்கசார்பின்றி புரிந்துணரும் ஜனநயாக பண்புகளை எமது நாட்டில் வளர்க்க வேண்டும். நாட்டின் நலனுக்காகவும் ஜனநாயக உரிமையை பெற்றுக் கொள்வதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.