துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்தை பார்த்து ஒருவர் நீங்க யாரு என்று கேட்டுள்ளார்.

 தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர்.

இதில் 17 வயது பாடசாலை மாணவி உட்பட 13 பேர் பலியாகினர். 

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பிரச்சினை எல்லாம் ஓய்ந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றுள்ளார்.

இந்நிலையிலேயே குறிநத்த நபர் மேற்கண்டவாறு ரஜினியை பார்த்து இவ்வாறு கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.