(இராஜதுரை ஹஷான்)

பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜுன அலோசியசிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்ட 118 பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் ஒரு போதும் பகிரங்கப்படுத்தப்படாது  என முன்னாள்  மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

. அர்ஜுன மகேந்திரன் ஒரு போதும் இலங்கைக்கு வரமாட்டார் என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புப்பட்ட  முக்கிய குற்றவாளிகள் இன்றும் சுதந்திரமாகவே இருக்கின்றனர்.  மோசடியில் ஈடுப்பட்ட  இருவர் மாத்திரமே தண்டனை பெற்று வருகின்றனர். முக்கிய சூத்திரதாரிகள் யார் என்ற விடயத்தினை ஜனாதிபதியை தவிர நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். 

அர்ஜுன மகேந்திரனை ஒரு போதும் இலங்கைக்கு அழைத்து வரமாட்டார்கள்.

  தமது குற்றங்களை மூடி மறைக்க பிரதமர்   கடந்த கால அரசாங்கத்தில் அதாவது 2004ம் ஆண்டு தொடக்கம் 2008 வரையிலான காலப்பகுதிகளில்  மத்திய வஙகியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கலில்  மோசடி இடம் பெற்றுள்ளதாக  குறிப்பிடுகின்றார். 

 கடந்த அரசாங்கத்தின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் அனைத்து விசாரனைகளுக்கும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் தயாரக உள்ளேன் , ஆனால் அர்ஜுன மகேந்திரன் தயாராக உள்ளாரா?  

அரசாங்கம் பிணைமுறி மோசடி தொடர்பில் மந்தகரமாகவே செயற்பட்டு வருகின்றது. ஒரு போதும் மோசடி செய்யப்பட்ட நிதி திரும்ப பெற  முடியாது .  அர்ஜுன மகேந்திரனையும் சட்டத்தின் முன்னிலைப்படுத்த முடியாமையின் காரணமாக பிரதமர் தொடர்ந்து பாதுகாக்கபடுவார் என தெரிவித்தார்.