யாழில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் இன்று இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு சுலோகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பியதுடன் வட மகாணா முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இது சம்பந்தமான மகஜர் ஒன்றிணையும் கையளித்தனர்.