மனித எலும்புக்கூடுகளை அகழும் நடவடிக்கை தொடர்கின்றது

Published By: Digital Desk 4

30 May, 2018 | 03:59 PM
image

 மன்னார் நகர நுழைவாயிலில் அமைக்கப்படவிருந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வு நடவடிக்கைகள் 3 ஆவது நாளாகவும் இன்றும் மேற்கொள்ளப்பட்டது.

'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் ஆகியவை கடந்த திங்கட்கிழமை முதல் மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஒரே நேரத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன் போது இன்று காலை லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வரும் மனித எலும்புக்கூடு அகழ்வு நடவடிக்கை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் அகழ்வு பணிகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில் ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்தல், மற்றும் வீடியோ பதிவு செய்வதற்கு அங்குள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.

அகழ்வு பணிகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட போது ஊடகவியலாளர்களுக்கு புகைபடங்கள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் உரிய தடைய பொருட்கள் மற்றும் மீட்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ள முடியவில்லை.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர்,களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், விசேட தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் ,மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மன்னார் நகரசபை,நில அளவைத்திணைக்களம்,பிரதேச செயலகம்,மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்தும் இரு இடங்களிலும் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வுகளின் போது மனித எலும்புத்துண்டுகள்,பற்கள் என மனித எச்சங்கள் அதிகளவில் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47